காலம் உரைந்து போக
கடவுளிடம் வரம் கேட்பேன்
காரணம் தேவையெனின்
சீராய் எடுத்துரைப்பேன்
உயிர் தந்த
உயிரிரண்டும்
உயிர் நீங்கும்
துயர் தாங்கும்
வலிமையில்லை
உயிராய் பலகிய உறவுகள்
வாழ்க்கை ஓட்டத்தில்
தொலைவு செல்ல
விலைவுகளை விரும்பியேற்று
மறந்து வாழ
மனம் ஏற்கவில்லை
சிறு பிள்ளையாய்
குறும்புகள் பல நிகழ்த்திப் பின்
இளமை தொடங்கியதும்
எண்ணற்ற தேவைகளுக்காய்
புன்னகையை தொலைத்து
மண்ணில் அலைய விருப்பமில்லை
இன்ப நினைவுகள் ஏந்தி உள்ளம்
இனி இது நிகழ்ந்திடுமா
என்றெண்ணி
வருந்தும் வாழ்வில் அர்த்தமில்லை
முகம் சுருங்கி
முடி உதிர்ந்து
முதுமை ஆட்கொள்ள
அரிய வாழ்வை உயிர் பிரிந்து
மண்ணில் புதைந்து போக
மனம் இணங்கவில்லை
---மாற்றம் வேண்டாம்---
Friday, 10 May 2019
மனதிற்கு ஒரு மனு..!..
மகிழ்வித்து மகிழ்ந்து
வாழ் மனமே - நிலம்
அகழ்ந்தெம்மை புதைப்போர்
சிந்தும் கண்ணீர் தான்
நம் வாழ்வை
அர்த்தமாக்கும் மனமே
சூழ்ச்சி செய்து ஆள்வதற்கு
வாழ்க்கை நிரந்தரமோ மனமே
எழுச்சி என்று கோசமிட்டும்
தொலைத்தலைந்தே நிம்மதியை
எதையெடுத்து சென்றிடுவோம்
உயிர் பிரிந்த பின்னே
உயர்ந்தோர்
தாழ்ந்தோர் என்றெல்லாம்
வாழ்ந்தோர் வகுத்ததுவே மனமே
பூமியின் தோற்றத்தோடு
தோன்றவில்லை
இனம் என்ற பொருளே!
இன்னும் எத்தனைதான்
பிரிவினைகள் மண்ணின் மேலே
உதித்த உயிர்க்கெல்லாம்
உணர்விருக்கு உணர்ந்திடு நீ மனமே
புகழ்ச்சியென்றும்
இகழ்ச்சியென்றும்
அகத்தினுள்ளே அழுக்கு சேர்த்து
இழிவான செயல் புரிந்து
அழிந்து போவதுவோ மனிதம்
பிரித்தல் அறிவு தான்
ஆறாம் அறிவென்றால்
நாம் அஃறிணையில்
இணைந்து கொண்டு
பண்புடனே வாழ்ந்திடலாம்
அன்பெடுத்து வா!
விலங்கினம் வேட்டை செய்யும்
உணவொன்று இல்லாது
உயிர் இறக்க நேருவதால் தானே,
கோட்டையில் தான் வாழ
வேட்டை செய்யும் மனித இனம்
விலங்கை விட உயர்ந்தில்லை
விளங்கி நீ விரைந்து வா மனமே!
சுயநலத்தில் சூழ்ச்சி செய்து
அயலவரை அழித்து விட்டு
சுடுகாட்டை
ஆள்வதை விட மனமே!
அடுத்த உயிர்க்கொரு
தீங்கும் நினைக்காமல்
எடுத்து உண்டாலும் பிச்சை
ஒரு இழிவும் உணக்கில்லை மனமே..!..
---மனதிற்கு ஒரு மனு!----
வாழ் மனமே - நிலம்
அகழ்ந்தெம்மை புதைப்போர்
சிந்தும் கண்ணீர் தான்
நம் வாழ்வை
அர்த்தமாக்கும் மனமே
சூழ்ச்சி செய்து ஆள்வதற்கு
வாழ்க்கை நிரந்தரமோ மனமே
எழுச்சி என்று கோசமிட்டும்
தொலைத்தலைந்தே நிம்மதியை
எதையெடுத்து சென்றிடுவோம்
உயிர் பிரிந்த பின்னே
உயர்ந்தோர்
தாழ்ந்தோர் என்றெல்லாம்
வாழ்ந்தோர் வகுத்ததுவே மனமே
பூமியின் தோற்றத்தோடு
தோன்றவில்லை
இனம் என்ற பொருளே!
இன்னும் எத்தனைதான்
பிரிவினைகள் மண்ணின் மேலே
உதித்த உயிர்க்கெல்லாம்
உணர்விருக்கு உணர்ந்திடு நீ மனமே
புகழ்ச்சியென்றும்
இகழ்ச்சியென்றும்
அகத்தினுள்ளே அழுக்கு சேர்த்து
இழிவான செயல் புரிந்து
அழிந்து போவதுவோ மனிதம்
பிரித்தல் அறிவு தான்
ஆறாம் அறிவென்றால்
நாம் அஃறிணையில்
இணைந்து கொண்டு
பண்புடனே வாழ்ந்திடலாம்
அன்பெடுத்து வா!
விலங்கினம் வேட்டை செய்யும்
உணவொன்று இல்லாது
உயிர் இறக்க நேருவதால் தானே,
கோட்டையில் தான் வாழ
வேட்டை செய்யும் மனித இனம்
விலங்கை விட உயர்ந்தில்லை
விளங்கி நீ விரைந்து வா மனமே!
சுயநலத்தில் சூழ்ச்சி செய்து
அயலவரை அழித்து விட்டு
சுடுகாட்டை
ஆள்வதை விட மனமே!
அடுத்த உயிர்க்கொரு
தீங்கும் நினைக்காமல்
எடுத்து உண்டாலும் பிச்சை
ஒரு இழிவும் உணக்கில்லை மனமே..!..
---மனதிற்கு ஒரு மனு!----
Sunday, 5 May 2019
மு(மூ)டிச்சாத்திய மன்னர்கள்
திருட்டு கூட்டங்களை
பெத்ததெடுத்த தாயழுது
கண்ணீர் நிரம்பியதில்
நான்கு புறம் கடலாச்சி
பேணும் வகையறியா
ஈன்ற பிள்ளைதனை
தாய் தத்துக் கொடுத்த கதை
ஏராளம் உலகிலுண்டு
புத்திரர்கள் கூட்டு சேர்ந்து
தாயை தத்து கொடுத்த கதை
வேறெங்கும் நிகழவில்லை
இங்கே நிகழுதுங்க
வேற்று தேசத்தவர்
போற்றி வளர்த்த நாட்டை
போராட்டம் பல நிகழ்த்தி
பெற்ற பின்னே மாற்றமென்ன?
அபிவிருத்தி செய்தோரை
அந்நியரென விரட்டிவிட்டு
கூவி விற்போர் கூடியிங்கு
தவிக்க செய்தார் தாய்நாட்டை
வளர்ச்சி என்று ஒன்றைக் காண
இன்று வரை முடியவில்லை
கிளர்ச்சி மட்டும் தொன்று தொட்டு
தொடருதிங்கே முடிவேயில்லை
பாடுபட்டோர் பசித்திருக்க
கூறு போட்டு ருசிப்பவர்கள்
தேரிலேறி போவதற்கும்
வரி செலுத்தி வழி சமைப்போம்
நரிகள் போல தந்திரமாய்
காரியத்தை நிகழ்த்த வேண்டி
ஆரியக் கூத்தாடியிங்கே
கூறியதை மாற்றிச் சொல்வர்
---மு(மூ)டிச்சாத்திய மன்னர்கள்---
பெத்ததெடுத்த தாயழுது
கண்ணீர் நிரம்பியதில்
நான்கு புறம் கடலாச்சி
பேணும் வகையறியா
ஈன்ற பிள்ளைதனை
தாய் தத்துக் கொடுத்த கதை
ஏராளம் உலகிலுண்டு
புத்திரர்கள் கூட்டு சேர்ந்து
தாயை தத்து கொடுத்த கதை
வேறெங்கும் நிகழவில்லை
இங்கே நிகழுதுங்க
வேற்று தேசத்தவர்
போற்றி வளர்த்த நாட்டை
போராட்டம் பல நிகழ்த்தி
பெற்ற பின்னே மாற்றமென்ன?
அபிவிருத்தி செய்தோரை
அந்நியரென விரட்டிவிட்டு
கூவி விற்போர் கூடியிங்கு
தவிக்க செய்தார் தாய்நாட்டை
வளர்ச்சி என்று ஒன்றைக் காண
இன்று வரை முடியவில்லை
கிளர்ச்சி மட்டும் தொன்று தொட்டு
தொடருதிங்கே முடிவேயில்லை
பாடுபட்டோர் பசித்திருக்க
கூறு போட்டு ருசிப்பவர்கள்
தேரிலேறி போவதற்கும்
வரி செலுத்தி வழி சமைப்போம்
நரிகள் போல தந்திரமாய்
காரியத்தை நிகழ்த்த வேண்டி
ஆரியக் கூத்தாடியிங்கே
கூறியதை மாற்றிச் சொல்வர்
---மு(மூ)டிச்சாத்திய மன்னர்கள்---
மலைத் தாய்
கொழுந்து கூடை சுமந்து கொண்டு
கழுத்தை வளைத்த படி
நடந்தவள் தான் - நாட்டின் தலையெழுத்தை மாற்றியவள்
பெயரெழுத தெரியாதவள்
பெயர் போற்றும் நாடு செய்தாள்
உயரத்தில் இருந்தும் கூட
துயரங்கள் பல கெண்டிருப்பாள்
காட்டிலுள்ள அட்டையெல்லாம்
குருதியை உறிஞ்சு விட
குளவியும் தேனீயும்
கொட்டிய துன்பம் பல
குடும்பத்திற்காய் மறந்துவிட்டு
வேலை செய்ய புறப்படுவாள்
பரிதி வந்து உச்சம் காட்ட
வருத்திடும் வெயிலிலும்
கருத்தாய் கொழுந்தெடுப்பாள்
மழையில் நனைந்தபடி
மழலை வாழ்வை மாற்ற வேண்டி
வெறுப்பின்றி வேலை செய்வாள்
பருத்தி விரர் போல்
பல பேர் வேலை பார்த்து
வருத்திடும் வார்த்தைகளால்
துரத்திய நாட்களிலே
மனம் வருந்தி மனை வருவாள்
இடறிய கற்களை
இடது காலால் தள்ளிவிட்டு
அடவி கொண்ட முட்கள் குத்த
சத்தமின்றி எடுத்தெரிந்து
அடுத்த அடியை எடுத்து வைப்பாள்
எடுத்த தேயிலையும்
அடுத்த தேசம் போயிரிச்சி
கொடுத்த இவள் தடமோ
இன்றளவும் மாறலியே
வெள்ளயர்கள் நட்ட பயிர்
ஆண்டு பல தள்ளி போச்சி
வேண்டி நின்றோர் வெறுப்பு காட்ட
பாண்டியத்தியம் வெளுத்துரிச்சி
இருக்கிற பாதுகாக்க
எவருக்குமே இயளவில்ல
பறக்குறத புடிக்கிறோம்னு
கருத்தாடல் நடக்குதிங்கே
கறுத்து போன கைகளுக்கு
அறுப்புக்கேற்ற ஊதியத்தை
மறுப்பவரும் மானுடர்தான்
குடித்த தேநீர்
உதிரமென மறந்துவிட்டு
தடித்த வார்த்தைகளால்
தர மறுப்பர் உரிமைகளை
எப்படியும் மாறிவிடும்
எம் நிலைமை என்றெண்ணி
இப்படியே வாழ்ந்து விட்டு
மடிந்தவர்கள் எத்தனையோ!
அத்தனையும் நடந்தேற
அடுத்த தலைமுறையின்
தலையெழுத்தை மாற்ற எண்ணி
எடுத்தடி வைக்கிறாள்
எத்துணையும் இல்லாமல்....
-------------மலைத்தாய்--------------
கழுத்தை வளைத்த படி
நடந்தவள் தான் - நாட்டின் தலையெழுத்தை மாற்றியவள்
பெயரெழுத தெரியாதவள்
பெயர் போற்றும் நாடு செய்தாள்
உயரத்தில் இருந்தும் கூட
துயரங்கள் பல கெண்டிருப்பாள்
காட்டிலுள்ள அட்டையெல்லாம்
குருதியை உறிஞ்சு விட
குளவியும் தேனீயும்
கொட்டிய துன்பம் பல
குடும்பத்திற்காய் மறந்துவிட்டு
வேலை செய்ய புறப்படுவாள்
பரிதி வந்து உச்சம் காட்ட
வருத்திடும் வெயிலிலும்
கருத்தாய் கொழுந்தெடுப்பாள்
மழையில் நனைந்தபடி
மழலை வாழ்வை மாற்ற வேண்டி
வெறுப்பின்றி வேலை செய்வாள்
பருத்தி விரர் போல்
பல பேர் வேலை பார்த்து
வருத்திடும் வார்த்தைகளால்
துரத்திய நாட்களிலே
மனம் வருந்தி மனை வருவாள்
இடறிய கற்களை
இடது காலால் தள்ளிவிட்டு
அடவி கொண்ட முட்கள் குத்த
சத்தமின்றி எடுத்தெரிந்து
அடுத்த அடியை எடுத்து வைப்பாள்
எடுத்த தேயிலையும்
அடுத்த தேசம் போயிரிச்சி
கொடுத்த இவள் தடமோ
இன்றளவும் மாறலியே
வெள்ளயர்கள் நட்ட பயிர்
ஆண்டு பல தள்ளி போச்சி
வேண்டி நின்றோர் வெறுப்பு காட்ட
பாண்டியத்தியம் வெளுத்துரிச்சி
இருக்கிற பாதுகாக்க
எவருக்குமே இயளவில்ல
பறக்குறத புடிக்கிறோம்னு
கருத்தாடல் நடக்குதிங்கே
கறுத்து போன கைகளுக்கு
அறுப்புக்கேற்ற ஊதியத்தை
மறுப்பவரும் மானுடர்தான்
குடித்த தேநீர்
உதிரமென மறந்துவிட்டு
தடித்த வார்த்தைகளால்
தர மறுப்பர் உரிமைகளை
எப்படியும் மாறிவிடும்
எம் நிலைமை என்றெண்ணி
இப்படியே வாழ்ந்து விட்டு
மடிந்தவர்கள் எத்தனையோ!
அத்தனையும் நடந்தேற
அடுத்த தலைமுறையின்
தலையெழுத்தை மாற்ற எண்ணி
எடுத்தடி வைக்கிறாள்
எத்துணையும் இல்லாமல்....
-------------மலைத்தாய்--------------
நாயகர்கள்?
மாற்றம் காண எண்ணி
மலையேறி
தலையில் சுமையேந்தி
பலநாள் பசித்திருந்து
பள்ளிக்கு அனுப்பியவள்,
துள்ளி வரும் பிள்ளை பாதம்
முள்ளில் பட்டு நோகுமென
காதில் கிடந்த
தோடு விற்று
பாதணி வாங்கித் தந்தவள்,
விளையாட்டு போட்டிக்கும்
கலைவிழா நிகழ்ச்சிக்கும்
சில்லறை செலவுக்கான
சிறு சேமிப்பையும்
சிரித்த முகத்தோடு
மகனுக்கு கொடுத்தவள்
மலையகத் தாய்
துடிப்பான பிள்ளையிவன்
படிப்பதாக கூறி
படிப்பறிவில்லாத
பெற்றோரை ஏமாற்றி
அறியா பருவத்தில்
மாயை காண்பிப்போர்
பின்னே சென்று
மன்னவர் அவர்தான் என்றெண்ணி
மனமதை அலையவிட்டு
சாதரண தரம் வரை
நிதானமாக இருப்பதே பெறும் பாடு
பெறுபேறு குறைந்த பின்னே
பெற்றோரை குறைகூறி விட்டு
பையெடுத்து பயணிப்பர் தலைநகரம்
பலி ஆடுகளை போல்
கூலி வேலை பல செய்து
புறக்கோட்டயைில் புத்தாடை
விலைக் கழிவில் வாங்கி
தலையில் வண்ணச் சாயம் பூசி
கழுத்தில் மாலையும்
கையில் வளையமும் அணிந்து
பகட்டாய்
தொடுதிரை தொலைபேசி கொண்டு
வலை வீசிடுவர்
தடுமாறும் இளையோரை
தம்மைப் போல் மாற்ற
சிந்திய வியர்வைக்கெல்லாம்
எந்த பயனுமில்லை என
நொந்து மனம் வாடும் பெற்றோரின்
சிதைந்த கரங்களிலே
சேமலாப நிதி கிடைத்தவுடன்
புதுக் கதைகள் பலக் கூறி
அதையும் கைப்பற்றி
முச்சக்கர வண்டி வாங்கி
மிச்ச பணத்தில்
நண்பர்களுடன் கொண்டாடி
ஊரை வலம் வருபவர்கள்
நாளைய தறைமுறையை
வழி நடத்துகின்ற
------------நாயகர்கள்------------
மலையேறி
தலையில் சுமையேந்தி
பலநாள் பசித்திருந்து
பள்ளிக்கு அனுப்பியவள்,
துள்ளி வரும் பிள்ளை பாதம்
முள்ளில் பட்டு நோகுமென
காதில் கிடந்த
தோடு விற்று
பாதணி வாங்கித் தந்தவள்,
விளையாட்டு போட்டிக்கும்
கலைவிழா நிகழ்ச்சிக்கும்
சில்லறை செலவுக்கான
சிறு சேமிப்பையும்
சிரித்த முகத்தோடு
மகனுக்கு கொடுத்தவள்
மலையகத் தாய்
துடிப்பான பிள்ளையிவன்
படிப்பதாக கூறி
படிப்பறிவில்லாத
பெற்றோரை ஏமாற்றி
அறியா பருவத்தில்
மாயை காண்பிப்போர்
பின்னே சென்று
மன்னவர் அவர்தான் என்றெண்ணி
மனமதை அலையவிட்டு
சாதரண தரம் வரை
நிதானமாக இருப்பதே பெறும் பாடு
பெறுபேறு குறைந்த பின்னே
பெற்றோரை குறைகூறி விட்டு
பையெடுத்து பயணிப்பர் தலைநகரம்
பலி ஆடுகளை போல்
கூலி வேலை பல செய்து
புறக்கோட்டயைில் புத்தாடை
விலைக் கழிவில் வாங்கி
தலையில் வண்ணச் சாயம் பூசி
கழுத்தில் மாலையும்
கையில் வளையமும் அணிந்து
பகட்டாய்
தொடுதிரை தொலைபேசி கொண்டு
வலை வீசிடுவர்
தடுமாறும் இளையோரை
தம்மைப் போல் மாற்ற
சிந்திய வியர்வைக்கெல்லாம்
எந்த பயனுமில்லை என
நொந்து மனம் வாடும் பெற்றோரின்
சிதைந்த கரங்களிலே
சேமலாப நிதி கிடைத்தவுடன்
புதுக் கதைகள் பலக் கூறி
அதையும் கைப்பற்றி
முச்சக்கர வண்டி வாங்கி
மிச்ச பணத்தில்
நண்பர்களுடன் கொண்டாடி
ஊரை வலம் வருபவர்கள்
நாளைய தறைமுறையை
வழி நடத்துகின்ற
------------நாயகர்கள்------------
காற்றின் காதலன்
கண்ணில் தென்படா காதலியே
உன்னை சுவாசிக்கிறேன்,
உன்னால் நானும் உயிர் வாழ்கிறேன்,
உன் தீண்டலில் மெய் சிலிர்க்கிறேன்-நீ
தீண்டுவதனால்தான் உயிர்துளிர்க்கிறேன்,
மழைக்காலத்தில் உன் ஈரத்தழுவல்களில்
விழுந்ததுண்டு அதிகம் நான் விரதங்களில்
உன்னைக் காணும் முயற்சியில் தோல்வியுற்றால் - எத்தனை பிறவிகளும் பிறக்கத் துடிப்பேன் இப்பூமியில் - இன்னும்
என்ன சொல்ல கவியில்,
உலவும் உன்போல் அதிசயம்
உண்டோ புவியில்......
-----காற்றின் காதலன்-----
உன்னை சுவாசிக்கிறேன்,
உன்னால் நானும் உயிர் வாழ்கிறேன்,
உன் தீண்டலில் மெய் சிலிர்க்கிறேன்-நீ
தீண்டுவதனால்தான் உயிர்துளிர்க்கிறேன்,
மழைக்காலத்தில் உன் ஈரத்தழுவல்களில்
விழுந்ததுண்டு அதிகம் நான் விரதங்களில்
உன்னைக் காணும் முயற்சியில் தோல்வியுற்றால் - எத்தனை பிறவிகளும் பிறக்கத் துடிப்பேன் இப்பூமியில் - இன்னும்
என்ன சொல்ல கவியில்,
உலவும் உன்போல் அதிசயம்
உண்டோ புவியில்......
-----காற்றின் காதலன்-----
கால மாற்றம்
படம் காட்டும் தொ(ல்)லைக்காட்சி
பாவனை அதிகரிச்சி
பிள்ளைங்க வழிதவறி போச்சி
வயசின் வகையறிய முடியாம
மாயவர் உள்ளம் கொண்டு
மயங்கி திரியுது சிறுவர் பருவம்
நவீன காலத்துல இதெல்லாம் - நா வேணாமுன்னு சொல்லவல்ல
பயன்பாட்டின் அளவைக் குறைக்கனுமுங்க
இல்லனா பயனுள்ளத மட்டும்
பிள்ளைகளுக்கு காட்டனுமுங்க,
பாட்டியிடம் கதை கேட்க நேரமில்ல
தாத்தாவின் புத்திமதி தலைக்கேறுதில்ல
பிள்ளைங்க மோசமுன்னு புலம்புமுன்னே
என்ன நடக்குதுன்னு
புரிஞ்சிக்கனும் பெரியவுங்க
செல்லிட தொலைபேசிய
கையில கொடுத்துவிட்டு
சொல்லுறத கேட்கலன்னு
பொலம்புறாங்க பெத்தவங்க
தள்ளி போகுது ஒழுக்கமெல்லாம்
சொல்லி கொடுக்கனும்க
வாழும் முறைய பத்தி
மாறும் வண்ணம் புத்தி....
--------காலமாற்றம்--------
பாவனை அதிகரிச்சி
பிள்ளைங்க வழிதவறி போச்சி
வயசின் வகையறிய முடியாம
மாயவர் உள்ளம் கொண்டு
மயங்கி திரியுது சிறுவர் பருவம்
நவீன காலத்துல இதெல்லாம் - நா வேணாமுன்னு சொல்லவல்ல
பயன்பாட்டின் அளவைக் குறைக்கனுமுங்க
இல்லனா பயனுள்ளத மட்டும்
பிள்ளைகளுக்கு காட்டனுமுங்க,
பாட்டியிடம் கதை கேட்க நேரமில்ல
தாத்தாவின் புத்திமதி தலைக்கேறுதில்ல
பிள்ளைங்க மோசமுன்னு புலம்புமுன்னே
என்ன நடக்குதுன்னு
புரிஞ்சிக்கனும் பெரியவுங்க
செல்லிட தொலைபேசிய
கையில கொடுத்துவிட்டு
சொல்லுறத கேட்கலன்னு
பொலம்புறாங்க பெத்தவங்க
தள்ளி போகுது ஒழுக்கமெல்லாம்
சொல்லி கொடுக்கனும்க
வாழும் முறைய பத்தி
மாறும் வண்ணம் புத்தி....
--------காலமாற்றம்--------
Thursday, 2 May 2019
வாழ்க்கை
உடல் என்ற பையெடுத்து
வாழ வந்தோம் சந்தைக்குள்ளே
இருக்கும் வரை இடர்களுடன்
பை நிரப்பும் வேலையுண்டு
இறப்பின் வாயில் திறந்தகொண்டு வாவென்றழைத்த பின்னே
இருக்கும் இடத்திலேயே பையை
இருத்தி விட்டு
அந்த வழி சென்றிடுவோம்
எம்மால் சிரித்தவர்கள்
இறந்த பின்னே அழுதிடுவர்
எம் செயலால் அழுதவர்கள்
அத்தருணம் புன்னகைப்பர்
எத்தனை பேர் வாழ்வு கண்டும்
பித்தனைப் போல் திரியுதுள்ளம்
போர்வைகளால் மூடிக்கொண்டு
பார்வையின்றி பாவஞ்செய்யும்
பிறப்பின் பால் வகை உரைப்போர்
அறிந்திருந்திருந்தும் திருந்தவில்லே
யாவருக்கும் ஒரு நியதி
மரித்த பின்னே மண்ணுக்குள்ளே
கோர்வை கொண்டு சேர்த்ததெல்லாம்
தீர்வையுடன் செலுத்த நேரும்
கூர் கொண்டு காத்திருந்து -
வேர் வரைக்கும் நாருரிக்கும்
விதியை விட வலியதுண்டோ!
மாயைகளில் மதி மயங்கி
கயவர்களாய் சதி புரிந்து
தீயதெல்லாம் செய்திங்கே
சேர்த்த செல்வம் எமக்குமில்லே
யார் கண்டு உரைப்பதிங்கே
பார் வாழ்வு முடிந்த பின்னே
சீர் கொண்டு போவதில்லை,
ஊர் சேர்ந்தே தீர்வெடுக்கும்
உடல் போர்த்தி புதைப்பதையும்
மிதித்த நிலம் கூட
சிதைத்து உணவளிக்கும்
தழுக்கான மேனியதை
புழுக்களுக்கும், கறையானுக்கும்
சாணம் கூட திருநீராகும்
எரித்து விட்டால் அதுவுமில்லை
கரியில் மிஞ்சும் சாம்பல் மட்டும்....
------வாழ்க்கை------
வாழ வந்தோம் சந்தைக்குள்ளே
இருக்கும் வரை இடர்களுடன்
பை நிரப்பும் வேலையுண்டு
இறப்பின் வாயில் திறந்தகொண்டு வாவென்றழைத்த பின்னே
இருக்கும் இடத்திலேயே பையை
இருத்தி விட்டு
அந்த வழி சென்றிடுவோம்
எம்மால் சிரித்தவர்கள்
இறந்த பின்னே அழுதிடுவர்
எம் செயலால் அழுதவர்கள்
அத்தருணம் புன்னகைப்பர்
எத்தனை பேர் வாழ்வு கண்டும்
பித்தனைப் போல் திரியுதுள்ளம்
போர்வைகளால் மூடிக்கொண்டு
பார்வையின்றி பாவஞ்செய்யும்
பிறப்பின் பால் வகை உரைப்போர்
அறிந்திருந்திருந்தும் திருந்தவில்லே
யாவருக்கும் ஒரு நியதி
மரித்த பின்னே மண்ணுக்குள்ளே
கோர்வை கொண்டு சேர்த்ததெல்லாம்
தீர்வையுடன் செலுத்த நேரும்
கூர் கொண்டு காத்திருந்து -
வேர் வரைக்கும் நாருரிக்கும்
விதியை விட வலியதுண்டோ!
மாயைகளில் மதி மயங்கி
கயவர்களாய் சதி புரிந்து
தீயதெல்லாம் செய்திங்கே
சேர்த்த செல்வம் எமக்குமில்லே
யார் கண்டு உரைப்பதிங்கே
பார் வாழ்வு முடிந்த பின்னே
சீர் கொண்டு போவதில்லை,
ஊர் சேர்ந்தே தீர்வெடுக்கும்
உடல் போர்த்தி புதைப்பதையும்
மிதித்த நிலம் கூட
சிதைத்து உணவளிக்கும்
தழுக்கான மேனியதை
புழுக்களுக்கும், கறையானுக்கும்
சாணம் கூட திருநீராகும்
எரித்து விட்டால் அதுவுமில்லை
கரியில் மிஞ்சும் சாம்பல் மட்டும்....
------வாழ்க்கை------
Wednesday, 1 May 2019
எது மகிழ்ச்சி
பிள்ளையின் புன்னகையில்
தாய்மை கொள்ளும் பெரு மகிழ்ச்சி!
உணவைக் காணும் வரை
பசித்தவனுக்கு ஏது மகிழ்ச்சி?
பூத்த புது மலர் கண்டால்
மனதுக்குள் பெரு மகிழ்ச்சி!
கேட்ட பொருள் கிடைக்கும் வரை
மழலைக்கு ஏது மகிழ்ச்சி?
வலை நிறைய மீனிருந்தால்
மீனவனுக்கு பெரு மகிழ்ச்சி!
மழையின்றி நிலம் வறண்டால்
உழவனுக்கு ஏது மகிழ்ச்சி?
சிலை வடிக்கக் கல் கிடைத்தால்
சிற்பிக்கு பெரு மகிழ்ச்சி!
உழைப்புக்கேற்ற ஊதியம் இன்றி
உழைப்போருக்கு ஏது மகிழ்ச்சி?
காகிதமும் பேனையும் கண்டால்
கவிஞனுக்கு பெரு மகிழ்ச்சி!
அமைதியான புவியிருந்தால்
உயிர்கள் காணும்
நிறைவான நிஜ மகிழ்ச்சி!
--எது மகிழ்ச்சி--
தாய்மை கொள்ளும் பெரு மகிழ்ச்சி!
உணவைக் காணும் வரை
பசித்தவனுக்கு ஏது மகிழ்ச்சி?
பூத்த புது மலர் கண்டால்
மனதுக்குள் பெரு மகிழ்ச்சி!
கேட்ட பொருள் கிடைக்கும் வரை
மழலைக்கு ஏது மகிழ்ச்சி?
வலை நிறைய மீனிருந்தால்
மீனவனுக்கு பெரு மகிழ்ச்சி!
மழையின்றி நிலம் வறண்டால்
உழவனுக்கு ஏது மகிழ்ச்சி?
சிலை வடிக்கக் கல் கிடைத்தால்
சிற்பிக்கு பெரு மகிழ்ச்சி!
உழைப்புக்கேற்ற ஊதியம் இன்றி
உழைப்போருக்கு ஏது மகிழ்ச்சி?
காகிதமும் பேனையும் கண்டால்
கவிஞனுக்கு பெரு மகிழ்ச்சி!
அமைதியான புவியிருந்தால்
உயிர்கள் காணும்
நிறைவான நிஜ மகிழ்ச்சி!
--எது மகிழ்ச்சி--
Tuesday, 30 April 2019
நிலம்
மிதித்தாலும் மதித்தாலும்
உதித்த உயிர்க்கெல்லாம்
உணவளிக்கும் உன்னதமே!
உயிரோடு இருக்கும் வரை
அயராதுரைத்திடலாம் நின் பெருமை
தன்டக்கம் காட்டிடும் நீ
அனைத்தையும் உன்னிலடக்கிடுவாய்!
இறந்தவர் தான் கீழிருப்போர்
மறந்தவர் தான் தரம் பிரிப்பர்
வரம் பெற்றோர் யார் இங்கே
உரம் தானே மரித்த பின்னே
சிரம் மீது தாங்கி எம்மை
கரம் தந்து காத்திடுவாய்
மந்திரங்கள் செய்பவரும்
தந்திரமாய் ஆழ்பவரும்
எந்தப் போரில் வென்றவரும்
வந்தடைந்தே வீழந்திடனும்
உன்னடியில்-
அந்தரத்தில் வாழ்பவரும்!...
---------------நிலம்---------------
உதித்த உயிர்க்கெல்லாம்
உணவளிக்கும் உன்னதமே!
உயிரோடு இருக்கும் வரை
அயராதுரைத்திடலாம் நின் பெருமை
தன்டக்கம் காட்டிடும் நீ
அனைத்தையும் உன்னிலடக்கிடுவாய்!
இறந்தவர் தான் கீழிருப்போர்
மறந்தவர் தான் தரம் பிரிப்பர்
வரம் பெற்றோர் யார் இங்கே
உரம் தானே மரித்த பின்னே
சிரம் மீது தாங்கி எம்மை
கரம் தந்து காத்திடுவாய்
மந்திரங்கள் செய்பவரும்
தந்திரமாய் ஆழ்பவரும்
எந்தப் போரில் வென்றவரும்
வந்தடைந்தே வீழந்திடனும்
உன்னடியில்-
அந்தரத்தில் வாழ்பவரும்!...
---------------நிலம்---------------
Subscribe to:
Posts (Atom)








