வாழ வந்தோம் சந்தைக்குள்ளே
இருக்கும் வரை இடர்களுடன்
பை நிரப்பும் வேலையுண்டு
இறப்பின் வாயில் திறந்தகொண்டு வாவென்றழைத்த பின்னே
இருக்கும் இடத்திலேயே பையை
இருத்தி விட்டு
அந்த வழி சென்றிடுவோம்
எம்மால் சிரித்தவர்கள்
இறந்த பின்னே அழுதிடுவர்
எம் செயலால் அழுதவர்கள்
அத்தருணம் புன்னகைப்பர்
எத்தனை பேர் வாழ்வு கண்டும்
பித்தனைப் போல் திரியுதுள்ளம்
போர்வைகளால் மூடிக்கொண்டு
பார்வையின்றி பாவஞ்செய்யும்
பிறப்பின் பால் வகை உரைப்போர்
அறிந்திருந்திருந்தும் திருந்தவில்லே
யாவருக்கும் ஒரு நியதி
மரித்த பின்னே மண்ணுக்குள்ளே
கோர்வை கொண்டு சேர்த்ததெல்லாம்
தீர்வையுடன் செலுத்த நேரும்
கூர் கொண்டு காத்திருந்து -
வேர் வரைக்கும் நாருரிக்கும்
விதியை விட வலியதுண்டோ!
மாயைகளில் மதி மயங்கி
கயவர்களாய் சதி புரிந்து
தீயதெல்லாம் செய்திங்கே
சேர்த்த செல்வம் எமக்குமில்லே
யார் கண்டு உரைப்பதிங்கே
பார் வாழ்வு முடிந்த பின்னே
சீர் கொண்டு போவதில்லை,
ஊர் சேர்ந்தே தீர்வெடுக்கும்
உடல் போர்த்தி புதைப்பதையும்
மிதித்த நிலம் கூட
சிதைத்து உணவளிக்கும்
தழுக்கான மேனியதை
புழுக்களுக்கும், கறையானுக்கும்
சாணம் கூட திருநீராகும்
எரித்து விட்டால் அதுவுமில்லை
கரியில் மிஞ்சும் சாம்பல் மட்டும்....
------வாழ்க்கை------

No comments:
Post a Comment