Sunday, 5 May 2019

போர்வை

காரிருள் வானை வியாபித்து
கடும் மழை மண்ணில் தடம் பதிக்க
மின்னல் ஔி கண்டு
மின்சாரம் தடை பட்டு
இடியோசை இறங்கி வந்து
கூரை மேல் நடை பயில
பல்லியும் சொல்லியழும்
பார் கண்ட மழைச்சீற்றம்
அத்தனையும் நடந்தேற
அள்ளி உனையெடுத்து
உடல் மூடி நான் தூங்க
எது நடந்தாலென்ன
விடியும் வரை
நீயென் உடனிருக்க....
      (போர்வை)

No comments:

Post a Comment